சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் பொறுத்தவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது எனலாம் இந்நிலையில் இந்த சேனலில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருவதோடு உலகளவில் பல தமிழ் ரசிகர்களை தனது வசம் வைத்திருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவடைந்து இருந்த நிலையில்
ஆறாவது சீசன் எப்போது தொடங்கபோகிறது இதில் யாரெலாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் மக்களிடையேபரவலாக இருந்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் பிக்பாஸ் சீசன் புதுபொலிவுடன் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்களின் பெயர்கள் அரசல்புரசலாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி இந்த சீசனை மீண்டும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கபோவதாகவும் இது வழக்கம் போல் விஜய் டிவி மட்டுமின்றி இணையத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ச்டரிலும் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் இதில் பிரபல தொகுப்பாளரான விஜே ரக்க்ஷன், சூப்பர் சிங்கர் பாடகி ராஜலட்சுமி, துணை நடிகர் கார்த்திக்குமார் , மாடல் அஜய்மேல்வின் போன்ற ஐந்து போட்டியாளர்கள் ஏற்கனவே அதிகாரபூர்வமாக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ஆறாவது போட்டியாளராக சின்னத்திரை பிரபல சர்ச்சை நடிகையான ஸ்ரீ நிதி கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவர் சமீபத்தில் தான் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தது
மட்டுமின்றி பிரபல நடிகர் சிம்புவை காதலிப்பதாக கூறி அவரது வீட்டின் முன்பு தர்ணா செய்திருந்தார். இப்படி இருக்கையில் இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்னவெல்லாம் செய்ய காத்து இருக்கிறாரோ சொல்லப்போனால் அடுத்த மீரா மிதுன் ரெடி போல என பலரும் கமென்ட் அடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த சீசனை சிம்பு அவர்களும் தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ள நிலையில் இந்த சீசனில் பல சுவாரசியங்களை எதிர்பார்க்கலாம் என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர் ….