Wednesday, December 11, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்அறக்கட்டளை எனும் பெயரில் வேற வேலை செய்த பிரபல சீரியல் நடிகை .... போலீசில் புகார்...

அறக்கட்டளை எனும் பெயரில் வேற வேலை செய்த பிரபல சீரியல் நடிகை …. போலீசில் புகார் கொடுத்த கட்டுப்பிடி மன்னன் சினேகன்…!

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் பலத்த பிரலத்தை பெற்று வருவதோடு தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர் எனலாம். அதிலும் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி

ரசிகர் கூட்டமே உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து மக்கள் மத்தியில் தன்னை மேலும் பிரபலபடுத்தி கொண்டதோடு அந்த சீசனின் ரன்னராகவும் வந்தவர் பிரபல முன்னணி சினிமா பாடலாசிரியர் சினேகன். இவர் பல முன்னணி வெற்றிப்படங்களில் பல பாடல்களை எழுதியுள்ள நிலையில் பல படங்களில் நடித்தும் உள்ளார் இருப்பினும் அவ்வளவாக மக்களிடையே பரிட்சியம் இல்லாமல் இருந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் தற்போது பல படங்களுக்கு

பாடல் எழுதி வருவதோடு உலகநாயகன் கமல் ஹசன் அவர்களின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் சினேகன் சின்னத்திரை பிரபல நடிகை ஒருவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் சினேகன் கூறியதாவது கடந்த 2015-ம் ஆண்டு முதல் சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி சினேகன் அறகட்டளை எனும் பெயரில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை செய்து வருவதாகவும் மேலும் அந்த அறக்கட்டளையின் முழு செலவையும் தனது சம்பளத்தின் நாற்பது சதவிதத்தில் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார் ஆனால் அந்த நடிகை

சினேகன் அறகட்டளை எனும் பெயரில் போலியான ஒரு அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் வருமானம் பார்த்து வருவதாக சினேகனுக்கு தகவல் வரவே அவர் உடனே இது குறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டபோது அவர் இதற்கு சரிவர பதில் கொடுக்காத நிலையில் அவர் மீது தனது வழக்கறிஞர் துணையுடன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ஜெயலட்சுமி அவர் சின்னத்திரை நடிகை என்பதை தாண்டி அவர் பாஜகவின் முக்கிய பிரமுகர் எனும் தகவலும் சமீபத்தில் வெளியான நிலையில் இது அரசியலில் நடக்கும் சூழ்ச்சிகள என்பது போன்ற பல கோணங்களில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் இதற்கு ஜெயலட்சுமி தரப்பில் இருந்து இதுவரை எந்த வித மறுப்போ அல்லது பதிலோ வரவில்லை என தெரியவருகிறது. இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments