சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக உள்ளனர். இதன் காரணமாக மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பல பிரபலங்களும் இதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களை பிரபலப்படுத்தி கொண்டு தற்போது திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் இலங்கையில் தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு வெகுவாக தன்னை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல நடிகை லாஸ்லியா. எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் ஈனும் ஆசையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா அதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில வாரங்களிலேயே தனது சுட்டித்தனம் கொஞ்சி பேசும் தமிழ் மற்றும் வசீகர அழகால் பலரை கவர்ந்ததோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவினை காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரது ஜோடி மக்கள் மத்தியில் வெகுவாக பிடித்து போனதை அடுத்து
இருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என எண்ணி வந்த நிலையில் அதற்கு நேர்மாறாக வெளியே வந்த பிறகு ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவே இல்லை. அதன் பிறகு தான் இது அனைத்தும் சினிமாவில் நடிக்க லாஸ்லியா ஆடிய நாடகம் என்று இருந்தும் கவின் அவரை உண்மையில் காதலித்து வந்த நிலையில் இந்த தகவல்கள் வெளியானதில் இருந்து லாஸ்லியாவை அவரது ரசிகர்கள் வெறுக்க தொடங்கினர். இருந்தும் அம்மினிக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது இதையடுத்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக தனது உடல் எடையை குறைத்து அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இருப்பினும்
தற்போது பட வாய்ப்புகள் ஏதும் அம்மிணியை தேடி வருவதில்லை காரணம் என்னதான் பண்ணாலும் அம்மினிக்கு நடிப்பு வராது என தெரிந்துகொண்ட தயாரிப்பளர்கள் மற்றும் இயக்குனர்கள் அவரை கண்டுகொள்வதே இல்லையாம் . இவ்வாறு இருக்கையில் தான் போட்ட அணைத்து திட்டங்களும் வீணாகி போனதை எண்ணி மிகுந்த மன வருத்தத்தில் உள்ளாராம் லாஸ்லியா. இனி நம்மால் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க முடியாது என நன்கு தெரிந்து கொண்ட லாஸ்லியா தனது சொந்த நாட்டிற்கே மூட்டையை கட்டி கிளம்பி விட்டராம். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…..