தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது உலகளவில் ஹாலிவுட் படங்களில் நடித்து பலரின் கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருப்பதோடு இளம் நடிகர்கள் பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக பதிவு போட்டதை அடுத்து அந்த தனிமையில் இருந்து மீண்டு வர தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற பல
படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து இவரது நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகையான நித்யா மேனன் நடித்துள்ளார் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் மேலும் இவரது பப்ளியான அழகு மற்றும் தேர்ந்த நடிப்பிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி இருக்கையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து
கொண்ட நித்யா மேனன் வீல் சேரில் வந்து இருந்தது அனைவரையும் தூக்கிவாரிபோட்டு இருந்தது. இது குறித்து கேட்டபோது அவர் படியில் தவறி விழுந்ததில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக அவரால் நடக்கமுடியவில்லை கடந்த ஒரு மாத காலமாகவே வீல் சேரில் இருந்தபடித்தான் இருக்கிறார் அது எலும்பு முறிவாக ஆன நிலையில் சில நாட்கள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடனே நடந்து வந்தார். மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நித்ய மேனன் இப்போது எனது கணுக்கால் நன்றாக உள்ளது எனது வேலையை
நானே பார்க்க தொடங்கி விட்டேன் எனது காலால் தற்போது எனது எடையை தாங்க முடிகிறது. அதுமட்டுமின்றி இப்படி அசையாமல் இருக்கும் நிலை ஏற்பட்டதை நினைத்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எனக்கு சரியான நேரத்தில் தான் நடந்து இருக்கிறது காரணம் கிடப்பில் இருந்த எனது பணிகள் அனைத்தையும் நான் நிறைவு செய்து விட்டேன் என சிரித்தபடி கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவகல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது….