கடந்த சில மாதங்களாக திரையரங்குகளில் படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமடைகிறதோ இல்லையோ அந்த படத்தை பற்றி ரிவியூ எனும் பெயரில் பேசி பலரும் பிரபலமடைந்து வருவதோடு அதன் மூலம் லாபமும் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கூல் சுரேஷ். இவர் அந்த படத்தை
தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பல படங்களுக்கும் ப்ரோமோசன் செய்கிறேன் எனும் பேச்சில் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட விருமன் பட ரீலிஷின் போது இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கரை காதலிப்பதாக வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இதையடுத்து சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்திற்காக பல வேலைகள் செய்து அனைத்திலும் பிரச்சனையை தானாக ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன் படத்தின் போது அதில் ஹீரோயினாக நடித்த நடிகை காயத்திரியை பார்த்து அவங்க எனக்கு பொண்டாட்டி மாதிரி, என் உங்களுக்கும் பொண்டாட்டி
மாதிரி , பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி மாதிரி என வாய்க்கு வந்தபடி பேசி தள்ளியிருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ள கூல் சுரேஷ் அவர் ஒரு நல்ல நடிகை மேலும் இந்த படத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார் என கூறியுள்ளார்…