தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலாரான பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து
கொண்டு பல்வேறு நாடுகளில் ஹனிமூனை கொண்டாடி வருகிறார். இருப்பினும் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே திரையுலகில் பல நடிகர்களை காதலித்த நிலையில் அது அனைத்தும் பாதியிலேயே போனது. அந்த வகையில் நயன்தாரா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிம்புவுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்த நிலையில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மாறியது பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து
வந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது முறிந்து போனது. இதனைதொடர்ந்து சில காலம் தனிமையில் இருந்த நயன்தாரா ஏற்கனவே திருமணமான பிரபல நடிகரான பிரபு தேவாவை காதலித்து வந்ததோடு அவரது நினைவாக தனது கையில் அவரது பெயரை பச்சைகுத்தி கொண்டார். அதன் பின்னர் சில பிரச்சனைகள் ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை சென்ற நிலையில் இருவரும்
பிரிந்து விட்டனர் இருப்பினும் அதன் பின்னரும் கையில் இருந்த பெயரை அழிக்காமல் அப்படியே இருந்த நயன்தாரா அதன் பின்னர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து அந்த டாட்டூவை பாசிடிவிட்டி என மாற்றியுள்ளார். இதையடுத்து இந்த புகைப்படம் மற்றும் தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ……