90-களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தையும் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாகவும் வாழ்ந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை ரேவதி. அந்த காலத்திலேயே படங்களில் வெறுமனே ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் கதைக்கு ஏற்ப பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து
தனக்கென நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் தக்க வைத்து கொண்டு இருப்பவர் மேலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் வேற லெவலில் நடித்து வருகிறார். நடிகை ரேவதி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த நிலையில் பிரபல முன்னணி நடிகரான சுரேஷ் சந்திர மேனனை காதலித்து கடந்த 1986-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின்னரும் தொடர்ந்து ரேவதி படங்களில் நடித்து வந்த நிலையில்
இருவரும் 27வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாததை அடுத்து இருவருக்கும் இடையில் சில மனகசப்புகள் ஏற்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தனிமையில் வாழ்ந்து வரும் ரேவதி கடந்த 2018-ம் ஆண்டு எனக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருப்பதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதைபார்த்த பலரும் வியந்துபோனதை அடுத்து ஒருவேளை தத்து குழந்தையாக இருக்கும் என எண்ணி
வந்த நிலையில் அது ரேவதிக்கு பிறந்த குழந்தை தானாம். ஆம் இது குறித்து விளக்கம் கொடுத்த ரேவதி நான் எனது குழந்தையை டெஸ்ட் டியூப் மூலமாக கருவுற்றேன் அதன் பின்னர் கர்ப்பமாக இருந்து எனது மகளை நான் பெற்றெடுத்தேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அவரது மகளக் மகீ தற்போது நன்றாக வளர்ந்து இருக்கும் நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரலாகி வருகிறது….