இன்றைக்கு சினிமாவில் திறமை மட்டும் இருந்தால் போதும் படங்களில் ஹீரோவாக நடிக்கலாம் என பல இளைஞர்களும் கிளம்பி வர காரணம் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். காரணம் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது நடிப்பு திறமையால் சினிமாவில் நுழைந்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தொடர்ந்து பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை தன் வசம் வைத்திருப்பவர் ரஜினி. ஏறக்குறைய
அறுபதை கடந்த நிலையிலும் தொடர்ந்து படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வரும் ரஜினி அவர்கள் சமீபத்தில் அண்ணாத்தா படத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த படத்தை தொடர்ந்து பிரபல இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி ஹீரோயினாக தமன்னா நடிக்கவுள்ள நிலையில் பிரியங்கா
மோகனும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கன்னட திரையுலகின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பொதுவாகவே சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது பல நடிகைகளின் கனவு எனலாம் இப்படி இருக்கையில் அப்படி ஒரு வாய்ப்பு தானாகவே கிடைத்தும் அதனை உதாசினபடுத்தியுள்ளார் பிரியங்கா மோகன். முதலில் ரஜினியிடம் இயக்குனர் நெல்சன் பிரியங்கா மோகனை
ஹீரோயினாக நடிக்க வைக்க கேட்டபோது உடனே ஓகே என சொல்லி விட்டராம். ஆனால் அதுவே பிரியங்கா மோகனிடம் கேட்டதற்கு அவர் முதலில் மறுத்துவிட்டு அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் அதிக சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் இல்லையென்றால் வேறு ஹீரோயினை பாருங்கள் எனக்கு தெலுங்கில் ஆறு படங்களில் பிசியாக உள்ளேன் பில்டப் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது….