தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களும் வெளியாகி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருவதோடு பலத்த வசூல் சாதனையையும் நடத்தி வருகிறது. இதையடுத்து பல முன்னணி நடிகர்களும் ஹீரோவாக நடிப்பதை தாண்டி கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வருகின்றன்ர். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில்
வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி வந்த நிலையில் தற்போது அவர் லத்தி படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இதையடுத்து கடந்த சில தினங்களாக இந்த படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் பிசியாக இருந்து வரும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரது அடுத்த படமான ‘ மார்க் ஆண்டனி படத்தின் ‘ பல புதிய அப்டேட்களை
கொடுத்துள்ளார். அதன் படி இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில் வினோத்குமாரின் மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது . மேலும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனைதொடர்ந்து இந்த படம் பிரியடிக் படமாக உருவாகவுள்ள நிலையில் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான எஸ்ஜே சூர்யா நடிக்கவுள்ளார்
. அதோடு விஷால் பேசுகையில், எஸ்ஜே சூர்யா சார் மூணு பேஜ் டயலாக் ஒரே ஷாட்டில் என் முன்னாடி பேசுனார், நான் அப்ப என்ன மறந்து அவர மட்டும் தான் பாத்துட்டு இருந்தேன். அது இல்லாம இது பீரியட் படம் எனும் நிலையில் இதில் மூணு விஷால் மற்றும் ரெண்டு எஸ் ஜே சூர்யாவா வேறு வேறு கோணத்தில் பார்க்க போறீங்க, இந்த படத்தின் மூலமாக ரவிச்சந்திரனின் திறமை மக்களுக்கு நன்றாக தெரிய வரும் என கூறினார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது……