தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் தொடங்கி இன்றளவு வரை தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு பல இளம் நடிகர்களுக்கும் முன் மாதிரியாக இருப்பதோடு இன்றைக்கு படங்களில் மாஸ் காட்சிகளில் பலருக்கும் சவால் விடும் வகையில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். தனது ஸ்டைல் மற்றும் தேர்ந்த நடிப்பால் உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றி வைத்துள்ளார் இப்படி இருக்கையில் நேற்றைய நாளில் சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது 72 -வது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் அங்காங்கே இவரது பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடியோதொடு அவரை நேரில் சந்திந்து வாழ்த்து கூற பலரும் அவரது போயஸ் கார்டன் வீட்டில் படையாக சூழ்ந்து இருந்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை என அவரது மனைவி லதா ரஜினிகாந்த்
கூறியதை அடுத்து ரசிகர்கள் பலரும் பலத்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பியதொடு அவரை வாழ்த்தி வழிநெடுக்க கோஷமிட்டபடி சென்றனர். இதனைதொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இணைய பக்கத்தில் தங்களது வாழ்த்துக்களை கூறி இருந்தனர் இந்நிலையில் பலரும் ரஜினி அவர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தங்களது இணைய பக்கத்தில்
பதிவிட்டு அதன் மூலம் அவருக்கு வாழ்த்துகளை கூறி வந்தனர். அப்படியொரு நிலையில் பிரபல முன்னணி சீரியல் நடிகரான ராஜ்கமல் தனது சிறுவயதில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு தனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி இருந்தார். இதையடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது……