கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகையான சமந்தா தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அந்த பதிவில் மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் இறங்கும் படி இருந்ததோடு அதில் தனக்கு மையோசிடிஸ் எனும் மர்ம நோய் இருப்பதாகவும் இது ஆட்டோ இம்முன் குறைபாட்டை ஏற்படுத்தும் நிலையில் இதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும்
விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன் என நம்புகிறேன் என உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதில் இருந்து அவரது ரசிகர்கள் உள்பட பலரும் திகைத்து போனதோடு அவர் மீண்டும் பழையபடி நலமுடன் திரும்பி வர பிரார்த்தனை செய்து வருவதோடு அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது நடிப்பில் யசோதா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை
பற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமந்தா தனது இணைய பக்கத்தில் தனது உடல் நிலையில் சிறுதும் முன்னேற்றம் இல்லாமல் தொடர்ந்து பின்னடைவை சந்திந்து வரும் நிலையில் என்ன நடக்க போகிறதோ என தெரியாமல் ஒரு மாதிரி சோகமாக உள்ளதாக மிகுந்த மான வேதனையுடன் கூறியிருந்தார். இதனைதொடர்ந்து தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில் இனி நான் நடிக்கபோவதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள நிலையில் அது குறித்து கேட்டபோது, தற்போது சகுந்தலம், குஷி ஆகிய இரு
படங்களில் கமிட்டாகி நடித்து வந்த நிலையில் குஷி படத்தில் மட்டும் சில காட்சிகளில் நடிக்கவேண்டியுள்ளது அதுவும் வரும் ஜனவரி மாதம் முடிந்து விடும் நிலையில் அடுத்து எந்த படத்தில் நடிக்க போவதில்லை சில காலம் அனைத்துக்கும் லீவு விட்டு தனது மருத்துவ சிகிச்சையில் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார் . இதன் காரணமகா அம்மிணியின் திரையுலக வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……