தற்போது தென்னிந்திய சினிமாவில் பொருத்தவரை ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியையும் பெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களை தாண்டி குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெறுவதோடு தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த
வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றியை தேடித்தந்த திரைப்படம் அறம். சமுதாயத்தில் நடக்கும் அலட்சியங்களை தோலுரிக்கும் வகையில் மூடாத ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் வகையில் கதை எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இதில் அந்த குழந்தையின் அப்பாவி அம்மாவாக நடித்து பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சுனுலட்சுமி. மலையாளத்தை
பூர்விகமாக கொண்ட இவர் அங்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தமிழில் சிரித்தால் ரசிப்பேன் படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து செங்காத்து பூமியிலே, டூரிங் டாக்கிஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையிலும் இவருக்கு வாய்க்கும் கதாபாத்திரங்கள் கிராமபுற மற்றும் குடும்ப பாங்கான கேரக்டர்களே அமையும்
வகையில் ஆனால் நிஜத்தில் அம்மிணி லெவலே வேற. காரணம் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி சமீபத்தில் மாடர்ன் உடையில் ஏடாகூடமாக போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அந்த புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அம்மிணி குடும்ப குத்து விளக்கா நெனச்சா இவங்க டார்ச் லைட்டா இருப்பாங்க போல என கமென்ட் அடித்து வருகின்றனர்……..