கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் ,மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல பலனை பெற்று தந்த திரைப்படம் கோலிசோடா. நான்கு அனாதை சிறுவர்களின் வாழ்க்கையில் அடையாளத்தை தேடும் நிலையில் அவர்களுக்கு நடக்கும் இன்னல்களை மையமாக எடுக்கபட்ட இந்த படம் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் பசங்க படத்தில் நடித்த நான்கு சிறுவர்களும் அப்படியே நடித்து இருந்தார்கள் மேலும் இந்த படத்தில்
ஹீரோயினாக நடித்து தனது இயல்பான நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை சாந்தினி. சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் ஒருமுறை தனது கல்லூரியில் இருந்து வீட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில் இவரை பார்த்த விஜய் மில்டன் இவரை படத்தில் நடிக்க வைக்கலாம் என எண்ணி அவருடன் சென்று போன் நம்பர் கேட்ட நிலையில் உடனே கோபமான சாந்தினி இவரை யாரென தெரியாத நிலையில் இடியட் என கண்டபடி திட்டித்தீர்த்து உள்ளார். அதன் பின்னர் அவருடைய வீட்டுக்கே
சென்ற விஜய் மில்டன் நடந்ததை கூறி சமாதானம் செய்து அவரை படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் சாந்தினி சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பல விருதுகளும் கிடைத்து இருந்தது இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்த நிலையில் அடுத்ததாக பத்து என்றதுக்குள்ள படத்திலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு வெளியான குரங்கு கைல பூமாலை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நிலையிலும் அந்த படம் தோல்வியை தழுவிய நிலையில் இவருக்கு மக்கள் மற்றும் திரையுலகில் போதிய வரவேற்பு
கிடைக்கவில்லை. அதன் பின்னர் நடிப்பை விடுத்து தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்த சாந்தினி ஒரு வழியாக படிப்பை முடித்த நிலையில் மீண்டும் சினிமாவில் நுழையும் வகையில் அதற்கான முயற்சியாக அடிக்கடி மாடர்ன் உடையில் போடோசூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் மேலும் சமீபத்தில் தளபதி விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடி அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் கோலிசோடா படத்துல வந்த பொண்ணா இது என வாயடைத்து போயுள்ளனர்…….