தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு எத்தனையோ இளம் புதுமுக இசையமைப்பாளர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு தங்களது புதுவிதமான திறமைகளின் மூலமாக மக்களை குதுகலபடுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பலரையும் தனது இசையால் மயக்கி வைத்து இருப்பதோடு பலருக்கும் இன்னமும் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. பலருக்கும் அவரை இளையராஜவாக
தெரிந்த போதிலும் அவரது உண்மையான பெயர் ராசைய்யா இந்நிலையில் சினிமாவின் மீது இளம் வயதிலேயே ஆர்வம் கொண்ட இவர் கடந்த 1976-ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் தனது முதல் படத்திலேயே தனது இசையால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்த அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் பல நூறுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து உள்ளார். இவ்வாறு
பிரபலமாக இருக்கும் நிலையில் இளையராஜா அவர்கள் ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா என இருமகன்களும் பவதாரணி எனும் மகளும் உள்ளார்கள். இதில் மூவரும் திரையுலகில் இசைதுறையில் கலக்கி வருகின்றனர் அதிலும் யுவன் சங்கர் ராஜா பற்றி சொல்லவே தேவையே இல்லை அந்த அளவிற்கு தனது அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு தனது இசையில் பல இளைஞர்களையும் பித்துபிடிக்க வைத்து வருகிறார். இப்படி இருக்கையில் இளையராஜாவின் மகளான பவதாரணி கடந்த சில வருடங்களுக்கு
முன்னர் வெளிவந்த மைடியர் குட்டி சாத்தான் படத்தின் பின்னணி பாடகியாக சினிமாவிற்குள் நுழைந்தார். இதையடுத்து தனது அப்பாவின் இசையில் பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்றது மட்டுமின்றி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களை பாடி வரும் அவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது……