பொதுவாகவே மக்கள் மத்தியில் தற்போது வெள்ளித்திரையில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் விரும்பி பார்க்ப்பட்டு வருவதோடு பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது. அதிலும் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே இல்லத்தரசிகளின் மத்தியில் தனி
ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். அந்த அளவிற்கு இந்த சேனலில் வெளியாகும் அணைத்து தொடர்களும் மக்களை வெகுவாக கவர்ந்து இருப்பதோடு பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி தொடர்களான நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் போன்ற தொடர்கள் ஆயிரம் எபிசோடுகளை கடந்த நிலையில் தற்போது முதல் சீசன்
முடிந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த தொடர்களை மக்கள் மத்தியில் விறுவிறுப்பாக இயக்கி வந்த பிரபல முன்னணி சீரியல் இயக்குனரான தாய் செல்வம் அவர்கள் சில மணிநேரங்களுக்கு முன்னர் எதிர்பாராத நிலையில் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் படங்களை இயக்கியுள்ளார் அந்த
வகையில் பிரபல முன்னணி நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் காலமாகியுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகிய நிலையில் சின்னதிரையினர் பலரும் பெருத்த சோகத்தில் மூழ்கிய நிலையில் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்……
💔 உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season 1#NaamIruvarNamakkuIruvar#PaavamGanesan#EeramaanaRojaave Season 2 pic.twitter.com/CYFDVCHnVK
— Vijay Television (@vijaytelevision) December 15, 2022