தென்னிந்திய சினிமாவில் தற்போது படங்களில் பல புதுமுக இசையமைப்பார்கள் அறிமுகமாகி பல மாறுபட்ட இசைதிறமையின் மூலமாக மக்களை தங்கள் வசம் கவர்ந்து இழுத்து வருவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற
திரைப்படமான 3 படத்தின் மூலமாக இசையமைப்பாளராக மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத். தனது முதல் படத்திலேயே துடிப்பான இசையின் மூலமாக பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தவிர்க்க முடியாத வகையில் இசையமைத்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் கூட உலகநாயகன்
கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்து உலகளவில் அமோக வெற்றியை பெற்ற விக்ரம் படத்தில் வேற லெவலில் இசையமைத்து இருந்தார். இவ்வாறு பிரபலமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக இசையமைத்து வரும் அனிருத் அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின்
உறவினரான ரவிச்சந்திரனின் மகனான அனிருத் அவர்களுக்கு வைஷ்ணவி அக்கா ஒருவரும் உள்ளார். மேலும் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் முடிந்த நிலையில் திருமண விழாவில் தனது அக்கா மற்றும் குடும்பத்துடன் அனிருத் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த புகைப்படத்தில் அனிருத்தின் அக்காவை இவங்க தான் அவரோட அக்காவா என வாயடைத்து போயுள்ளனர்……