தற்போது சினிமாவில் முன்னணி பிரபலங்களின் வாரிசுகள் பலரும் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரபல முன்னணி நடிகர் நவரச நாயகன்
கார்த்தியின் மகனும் இளம் நடிகருமான கவுதம் கார்த்திக் பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இளம் நடிகையான மஞ்சிமா மோகனை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு பட வேலைகளில் பிசியாக இருந்து வந்த நிலையில் தற்போது
இருவரும் ஹனிமூன் சென்றுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது . இதையடுத்து இவர்கள் இருவருக்கும் திருமணமாகி சில மாதங்கள் கடந்த நிலையில் இருவரும் தொடர்ந்து பிசியாக பட வேலைகளில் இருந்து வந்ததை அடுத்து தற்போது இருவரும் தங்களது இல்லற வாழ்க்கையை தொடங்க எண்ணி இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் இருவரும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் ஹனிமூன் சென்றுள்ளதை அடுத்து அங்கு இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும்படியான பல புகைப்படங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு பெரிதளவில் பகிர்ந்து வருகின்றனர்………….
View this post on Instagram