சின்னத்திரையில் முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரையும் ரசிகர்களாக வைத்துள்ளது எனலாம் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையிலும் தமிழில் பலத்த
வரவேற்பை பெற்றுள்ளது . அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருவதை அடுத்து ஏறக்குறைய ஆறு சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது . இந்நிலையில் இந்த சீசனில் புது மாறுதல்களாக இரண்டு பிக்பாஸ் வீடு உள்பட பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர் . இது ஒரு பக்கம் இருக்க எப்போதும் பிக்பாசில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு என்று தனி பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம்
இவ்வாறான நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் எனும் தகவல்கள் இணையத்தில் அவ்வபோது வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது . இதையடுத்து அணைத்து சீசன்களிலும் விஜய் டிவியை சேர்ந்த பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் நிலையில் இந்த முறை கலக்கபோவது யாரு புகழ் பாலா கலந்து கொள்ள இருப்பதாக
பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது . பாலா தற்போது பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாததை பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர்…………………..