இன்றைக்கு சினிமாவில் முன்னணி நடசத்திரங்களாக வலம் வரும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் பெரும்பாலும் சின்னத்திரையின் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொண்டவர்கள் தான் . அந்த வகையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலமாக பல ரசிகர்களின் மனதில் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பல முன்னணி தொடர்களில் கதையின் நாயகியாக நடித்து தனது வசீகரமான
அழகான தோற்றம் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை வாணி போஜன். மேலும் பலரது மத்தியில் சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்பட்டு வந்த நிலையில் சின்னத்திரையை தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் வாணி போஜன் பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் வாணி போஜன் பிரபல
நடிகர் ஒருவருடன் நெருக்கமாக லிவிங் ரிலேசன்ஷிப்பில் இருந்து வருவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் விளக்கம் கொடுத்துள்ள வாணி போஜன் அதில், தொலைகாட்சியில் நடித்து வந்த வரை என்னை யாரும் இது மாதிரி பேசவில்லை ஆனால் அதுவே சினிமாவில் படங்களில் ஹீரோவுடன் ஜோடியாக நடிக்க தொடங்கியதை அடுத்து
அந்த நடிகருடன் இணைத்து தவறாக எழுதி பேச தொடங்கி விடுகிறார்கள். ஏன் எதுக்கு இந்த மாதிரி எல்லாம் போடுகிறார்கள், அவர்களுக்கு வியுஸ் வேண்டும் என்று இவ்வாறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என மிகுந்த கோபத்துடன் கூறிருக்கிறார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது…………..