தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் நடித்து அதன் மூலமாக தன்னை பிரபலபடுத்தி கொள்பவர்களை காட்டிலும் சோசியல் மீடியா மற்றும் சின்னத்திரையில் நடித்து அதன் மூலமாக பிரபலமானவர்களே அதிகம் எனலாம் . இப்படி ஒரு நிலையில் தனியார் முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும்
நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பலரும் கலந்து கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்
தாமரைச்செல்வி . நாடகத்துறையின் மூலமாக பிரபலமான இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் வெகுவாக் கவர்ந்த நிலையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு பல முன்னணி தொடர்களில் நடித்து வருவதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தாமரை
சமீபத்தில் தனது யூடுப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது சொந்த ஊரான புதுகோட்டை அ மாத்தூரில் புதிதாக பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார் அந்த வீட்டின் புதுமனை புகுவிழா வரும் ஞாயிற்று கிழமை நடக்க உள்ள நிலையில் அந்த அழைப்பிதழை அதில் பதிவிட்டு அனைவரும் வருக என குறிபிட்டுள்ளார் . இந்நிலையில் இந்த விழாவில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது………………
View this post on Instagram