பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை பலரும் ஹீரோவாக நடிக்க தான் ஆசைபடுவார்கள் எனலாம் இபப்டியொரு நிலையில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பும் வரும் நிலையிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி . துவக்கத்தில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த
நிலையில் தற்போது ஹீரோ, வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் கூட ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் ஜவான் படத்திலும் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி
குறித்த சர்ச்சையான பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களுக்கு பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்திருந்தார் இறுப்பினும் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை . இந்நிலையில் தற்போது மீண்டும் அதே கூட்டணில் அடுத்த படத்தில்
நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் விஜய் சேதுபதி எடுத்த முடிவின் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வருகின்றனர் . இதையடுத்து பொன்ராம் வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களது கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என பொறுந்திருந்து பாப்போம் என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்……………..