இன்றைக்கு சினிமாவில் பலதுறைகளை சார்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இன்றைக்கு ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என துறைகளில் அசத்தி வருபவர் பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளரும் விஜய் ஆண்டனி.
இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் கொலை திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது . இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் நேற்றைய நாளில் அவரது வீட்டில் துயர சம்பவம் அரங்கேறி அனைவரையும் பெருத்த துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்
பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மீரா எனும் மகள் ஒருவர் உள்ளார் . இதையடுத்து மகள் மீராவிற்கு பதினாறு வயதாகும் நிலையில் அவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று அதிகாலை அவரது வீட்டில் தூக்கிட்டு சுயமாக தனது முடிவை தேடி கொண்டுள்ளார். தகவல் அறிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது அவர் காலமாகி
இருந்துள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் உறைய செய்துள்ளது . இதையடுத்து அவரது உடல் சென்னையில் அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் . இந்நிலையில் அந்த புகைப்பட தொகுப்புகள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வருகிறது ……………