தென்னிந்திய சினிமாவில் தற்போது மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு அதிகளவில் எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிகழ்வுகளுள் ஒன்று பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் குறித்ததாக தான் இருக்கும் . இந்த படத்தில் மன்சூர் அலிகான் , சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மேத்யு, மிஸ்கின் உள்பட பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்கலாம் என இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் மற்றும்
திரையுலகினர் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வருகிறது. இப்படியொரு நிலையில் லியோ படக்குழு தொடர்ந்து படம் குறித்த பல அப்டேட்களை கொடுத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி வந்த நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி உலகளவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் தற்போது லியோ படம் திரையரங்குகளில் ரீலிஸ் ஆகாது எனும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில்
உண்மை தான் லியோ படம் வெளியாகபோவதில்லை தான் ஆனால் அது தமிழில் அல்ல ஹிந்தியில் ஆம் லியோ படம் பல மொழிகளில் வெளியாக இருந்த நிலையில் ஹிந்தியில் பிரபலமான மூன்று மல்டிபிலெக்ஸ் தியேட்டர்களில் படத்தை வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளனர். மேலும் லியோ படத்தின் ஒடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் வாங்கி உள்ளதை அடுத்து ஒரு படம் ஒடிடி வெளியானால் அது படம் திரையில் வந்து எட்டு வாரங்கள் கழித்தே ஒடிடியில் வெளியாகும். ஆனால்
ஹிந்தியில் மட்டும் நான்கு வாரங்களில் வெளியிட இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் கூறிய நிலையில் அந்த மூன்று மல்டிபிலெக்ஸ் தியேட்டர் உரிமையாளர்களும் லியோ படத்தை நிச்சயமாக திரையிட மாட்டோம் என கூறியுள்ளனர். இந்நிலையில் அங்கு அதிகளவில் தியேட்டர்கள் இருப்பதால் வசூலில் லியோ பெருமளவில் அடிவாங்க வாய்ப்பு இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது……………..