இன்றைக்கு என்னதான் படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள் . அந்த வகையில் 80-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின்
படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரபல முன்னணி நடிகை கவிதா. இவர் முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியான ஓ மஞ்சு எனும் படத்தின் மூலமாக ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் ஏதும் நடிக்காமல் வீட்டில் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து
கொண்டு பேசிய கவிதா பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் நான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் இப்படி இருக்கையில் நானும் அவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பத்திரிக்கைகளில் வெளிவந்தது . இதைபார்த்த அதிர்ந்து போன உடனே அந்த பத்திரிக்கை நிறுவனத்துக்கு சென்று எதற்கு
நீங்கள் இந்த மாதிரியான பொய்யான செய்திகளை பரப்ப வேண்டும் என அவர்களுடன் சண்டை போட்டேன் இறுதியில் அவர்கள் தவறை உணர்ந்து அந்த செய்தியை நீக்கி விட்டார்கள் என கூறியுள்ளார்கள் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………..