பொதுவாக மக்கள் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே தனி பெரும் பிரபலம் இருக்கும் அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வேற லெவலில் பலரையும் கவர்ந்த நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் .
இதனைதொடர்ந்து வழக்கம் போல் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் வந்த நாள் முதலே டாஸ்குக்குகள் தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் போட்டியும் சண்டையும் வாக்குவாதமும் களைகட்ட ஆரம்பித்து விட்டது . இதையடுத்து பிக்பாஸ் தன் பங்கிற்கு தொடர்ந்து பல டாஸ்க்குகளை கொடுத்து வரும்
நிலையில் தற்போது பிக்பாஸ் க்நொவ் யுவர் கௌச்மேட்ஸ் எனும் டாஸ்க்கை கொடுத்துள்ளார் . இதில் சக போட்டியாளர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இருக்கும் பட்சத்தில் முதல் நாளே விஷ்ணு மற்றும் மாயா இருவரும் மோதிக்கொள்ள தொடங்கியதை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையில் துவக்கத்தில் அமைதியாக சென்ற பேச்சுவாரத்தை அடுத்த நாளே பெரும் வாக்குவாதமாக மாறியது .
இந்நிலையில் இன்றைய நாளில் இவர்கள் இருவருக்கும் இடையில் பலத்த சண்டை வெடித்த நிலையில் மாயா ” அவன் என்ன எனக்கு மாமனா மச்சானா ” என சகட்டுமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளார் . இதையடுத்து இந்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்………………
#Day3 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/H93VgyoaIy
— Vijay Television (@vijaytelevision) October 4, 2023