பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், மேத்யு, சாண்டி, த்ரிஷா, கவுதம் மேனன் என முன்னணி நட்சத்திர பட்டாளமே உள்ளார்கள் . மேலும் இந்த படத்திற்கு பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும்
நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருவதோடு பல சாதனைகளை முறியடித்து வருகிறது . இதையடுத்து லியோ படக்குழு தொடர்ந்து ப;படம் குறித்த பல அப்டேட்களை வெளியிட்டு வரும் நிலையில் நேற்று கூட லியோ படத்தில் வெளியாகும் மூன்றாவது பாடலின் வீடியோ இன்று வெளியாகும் என கூறியிருந்தனர் இது ஒரு
பக்கம் இருக்க சமீபத்தில் லியோ படத்தின் இதுவரை வெளிவரத பல புகைப்படங்கள் வெளியாகி பலரையும் வியப்படைய வைத்துள்ளது அந்த வகையில் லியோ படத்தில் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் அங்கு விஜய் அவர்கள் தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அங்கு எடுக்கப்பட்ட
பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது மேலும் அதில் தளபதி விஜய் பார்த்திபன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் அவரது மனைவியாக நடித்த த்ரிஷா மகன் மேத்யு மகள் இயல் அவர்கள் ஒன்றாக நெருக்கமாக பல காட்சி புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தளபதி ரசிகர்கள் பலரும் இதனை இணையத்தில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்…………………..