இன்றைய சினிமாவில் பல இளம் நடிகைகள் ஹீரோயினாக படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளியான நெடுஞ்சாலை படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ்
மக்களிடையே தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ஷிவதா நாயர் . இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து ஜீரோ, அதே கண்கள் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான தீராகாதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்
ஷிவதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, எனக்கு காதல் திருமணம் தான் எனது கணவரும் நானும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்தோம் ஆனால் எங்களுக்குள் மற்ற காதலர்கள் போல மணிகணக்கில் பேசுவது வெளியில் செல்வது நெருக்கமாக பழகுவது என எதுவுமே இருந்தது இல்லை அவர் அவரது வேலையை பார்த்து கொண்டிருந்தார் அதேபோல் நானும் எனது
வேலையை பார்த்து கொண்டிருந்தேன் . மேலும் திருமணத்திற்கு பின்னரும் நங்கள் அப்படித்தான் இருக்கிறோம் அவர் என்னை மிகவும் பாசமாக பார்த்து கொள்கிறார் மேலும் எனது சினிமா வாழ்க்கையில் பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறார் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………….