கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்து மீண்டும் தனது திரையுலக வாழ்க்கையில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் விஷால். இதற்கு முன்னர் இவரது நடிப்பில் பல படங்கள் வெளியான நிலையிலும் அவை அனைத்தும் மக்கள் இடையே கலவையான விமர்சனத்தையே பெற்ற
நிலையில் இந்த படம் இவருக்கு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை அடுத்து எப்போது திருமணம் என பலரும் இவரிடம் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் சமீபத்தில்
பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஷால் தனது திருமணம் குறித்து விளக்கமாக பேசியுள்ளார். அந்த வகையில் அதில் பேசியிருப்பதாவது, திருமணம் என்பது சாதரணமான விஷயம் இல்லை, அதற்கு புரிதல் பக்குவம் வேண்டும் திடீரென ஒரு முடிவு எடுத்துவிட்டு பின்னாடி இப்படி ஆகி விட்டதே என யோசிக்க கூடாது. ஏனெனில் திருமணம் என்பது ஒரு பெண்ணின்
வாழ்க்கை சம்பந்தப்பட்டது எனக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளது அந்த விஷயங்கள் எல்லாம் முடிந்து எனது வாழ்க்கையிலும் திருமணம் நடக்க வேண்டும் என எழுதிருந்தால் அது என்னுடைய வாழ்க்கையில் நிச்சயம் நடக்கும் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………….