கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது இந்நிலையில் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் எதாவது ஒரு வகையில் சிக்கி காலமாகி வருகின்றனர் . இவ்வாறு இருக்கையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் கார் விபத்தில் சிக்கியுள்ள வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது எனலாம் . அந்த
வகையில் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களை பாடி தனது இனிமையான குரலால் பலரது மனதையும் கொள்ளை கொண்டது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி பாடகி சின்மயி . இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடியுள்ள இவர் பாடல்கள் மூலமாக
பிரபலமானதை காட்டிலும் மீடு சர்ச்சையின் வாயிலாக பிரபலமானதே அதிகம் எனலாம் . இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்மயி அடிக்கடி பல மாடர்ன் புகைப்படங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வந்த நிலையில் சமீபத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது இரு குழந்தைகளுடன் நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே
வந்த ஆட்டோ ஓட்டுனர் குடிபோதையில் இவரது காரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறியுள்ளார் . மேலும் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை எனவும் தயவு செய்து குடித்து விட்டு வாகனம் ஒட்டாதீர்கள் என உருக்கமுடன் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் அவருக்கு நலம் விசாரித்து வருகின்றனர்………………..