பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் மக்கள் மத்தியில் அவ்வளவாக விரும்பி பார்க்காத நிலையிலும் துளியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது . அந்த வகையில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக
கலந்து கொண்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் பதிமூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பிக்பாஸ் அடுத்த கட்ட முடிவாக இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஐந்து போட்டியாளர்களை களமிறக்கியுள்ளது . அந்த வகையில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக விஜே அர்ச்சனா, கானா பாலா , தினேஷ், அன்னபாரதி மற்றும் டிஜே பிராவோ
ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் முதல் நாளே இவர்களை தற்போது பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருக்கும் பூர்ணிமா ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்களையும் ஸ்மால் பாஸ் வீட்டில் அனுப்பியுள்ளார் . இது ஒரு பக்கம் இருக்க வந்த முதல் நாளே அர்ச்சனா கதறி அழும் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தி வருகிறது . இதனைதொடர்ந்து இதற்கான காரணம் குறித்து கேட்கையில் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தனக்கு மரியாதை தருவதில்லை எனவும் அதிலும் மாயா தான் நான் இவ்வாறு கதறி அழ முக்கிய காரணம் எனவும் அதில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………………