மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொள்ள பலரும் அரவம் காட்டி வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பலரும் கலந்து
கொண்டுள்ளனர். மேலும் இந்த சீசனில் பல மாற்றங்களை பிக்பாஸ் குழுவினர் கொண்டு வந்த நிலையில் பதினெட்டு போட்டியாளர்கள் முதற்கட்டமாக வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில் துவக்கத்திலேயே பிக்பாஸ் தனது வேலையை செய்ய தொடங்கிய நிலையில் கூல் சுரேஷை அழைத்து டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார் . அதில் முதல் ஆளாக வந்த நீங்கள் தான் இந்த வாரத்தின் கேப்டன் எனவும் அதேபோல் அடுத்து வரும் போட்டியாளர்கள் உங்களுடன் விவாதித்து வெற்றி பெறும் நபர்கள்
தான் அடுத்த கேப்டன் . இந்த டாஸ்க் கடைசி போட்டியாளர் வரை நடைபெறும் என கூறிய நிலையில் இதில் பலரும் எளிதில் இந்த வாய்ப்பை விட்டு கொடுத்து விட்டனர் இருப்பினும் இதில் சிலர் விடாமல் தொடர்ந்து இதற்கு வாக்குவாதம் செய்து வந்தனர் இருந்தாலும் அந்த வாய்ப்பு அடுத்ததாக வந்த நபருக்கு தான் போனது அதிலும்
விஷ்ணு , யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி இடையே பெரிதளவில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இவர்கள் யாருக்கும் இது கிடைக்காமல் இறுதியில் வந்த விஜய்க்கு கேப்டன் வாய்ப்பு போனது. இந்நிலையில் முதல் வாரத்திலேயே சூடு பிடிக்க துவங்கிய நிலையில் இந்த சீசனில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் …………