பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பிரபலங்களும் மக்கள் மத்தியில் மேலும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் எனலாம். இந்நிலையில் கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல முன்னணி தொடர்களில் நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமாக இருந்து வவரும் நிலையில் அந்த தொடர்களில் தன்னுடன் நடித்து வந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இருவரும் ஒன்றாக
வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் தனித்து வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ரச்சிதா அண்மையில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் இன்றைய நாளில் அவரது அப்பா காலமாகி உள்ள நிலையில் அவரது மறைவை
தாங்க முடியாத நிலையில் அவருடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைபடத்தை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருவதோடு அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்………….
View this post on Instagram