திரையுலகில் கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்று என பார்த்தால் அது தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் பற்றியதாக தான் இருக்கும் . இந்நிலையில் இந்த படத்தை பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் தளபதி விஜய் அவர்களுக்கு என இருக்கும் ரசிகர் பட்டாளம் என்பதைப் தாண்டி லோகேஷ் என்றே தனி ரசிகர்
பட்டாளமே திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் உள்ளது. இதையடுத்து இந்த திரைப்படம் உலகளவில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது லோகேஷ் இதற்கு முன்னர் பல குறும்படங்களை இயக்கி வந்ததை அடுத்து மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக சினிமாவில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தின் வெற்றியை அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நிலையில் இவரது பிரபலம் தற்போது
தென்னிந்தியாவை தாண்டி எகிறியுள்ளது. இவ்வாறு இருக்கையில் லியோ படத்தை அடுத்து லோகேஷ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்க உள்ளார் . இவ்வாறு பிரபலமாக பிசியாக பல படங்களில் இருக்கும் நிலையில் லோகேஷ் அவர்களது குடும்பம் குறித்த பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்
மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கடந்த 1986-ம் ஆண்டு பரமேஸ்வரன் மற்றும் சுனிதாவுக்கு பிறந்த நிலையில் இவருக்கு தம்பி ஒருவரும் உள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………….