தற்போது சினிமாவில் படங்களில் ஹீரோயினாக நடிக்க பல இளம் நடிகைகள் புதிதாக வந்துவிட்ட நிலையிலும் ஒரு சில முன்னணி நடிகைகள் தொடர்ந்து அவர்களுக்கு சவால் விடும் வகையில் இளமையாக இருப்பதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை
சமந்தா . இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வரும் நிலையிலும் அவரது உடல் நிலை கடந்த சில வருடங்களாக மோசமான நிலையில் இருப்பதோடு மையோசிடிஸ் எனும் ஆட்டோஇம்முன் நோயால் பாதிக்கபட்டுள்ள நிலையில் இதற்காக பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக ஓரளவிற்கு உடல்நிலை
தேறிய நிலையில் தற்போது மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து இது குறித்து விசாரிக்கையில் சமந்தா படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் இறங்கும்படி இருப்பதோடு வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையை அதிகரித்து உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சையை எடுத்துகொள்வதாக கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவர் விரைவில் நலமுடன் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்…………………