தளபதி விஜய் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ திரைப்படம் இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், மேத்யு, சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன் , பிரியா ஆனந்த் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்கலாம் மேலும் இந்த படத்தில்
கேமியோ யார் நடிக்க போகிறார் என்பது போலன பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருப்பதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் லியோ திரைப்படம் வேற லெவலில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உலகளவில் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹெரல்ட் தாஸ்
எனும் கதாபத்திரத்தில் நடித்துள்ளார் அர்ஜுன் சினிமாவில் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள போதும் இது போன்ற கேரக்டரில் இதுவரை நடித்தது இல்லை என அவரே கூறியுள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த படத்தில் அர்ஜுன் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ள நிலையில் அதுவும் கிளைமாக்ஸ் இவர் நடித்ததை பார்த்து மிரண்டுபோன படத்தின்
இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இவருக்கு விலையுயர்ந்த பொருளை பரிசாக கொடுத்துள்ளார். அந்த வகையில் லோகேஷ் அவர்கள் அர்ஜுனுக்கு சுமார் 11 லட்சம் மதிப்பிலான வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் . இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………