மக்கள் மத்தியில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் தான். இந்நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே திரையுலகில் மற்றும் உலகளவில் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் இந்த படத்தில் மிஸ்கின், மன்சூர் அலிகான், மேத்யு, அர்ஜுன், சாண்டி என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இதையடுத்து இந்த படம் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு முதல் நாளே சுமார் 148.5 கோடிக்கு மேல்
வசூல் செய்துள்ளது. இந்நிலையில் லியோ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக ஒரு டிரென்ட் செட் ஆகி வருகிறது . அதன் காரணமாக ஒரு படம் வெற்றியானதும் அதன் பட தயாரிப்பாளர் அந்த படத்தின் இயக்குனர் , ஹீரோ, இசையமைப்பாளர் என பலருக்கும் பரிசுகளை கொடுத்து சந்தோசப்டுத்தி வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின்
வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆன லலித் அவர்கள் படத்தின் ஹீரோவான தளபதி விஜய் அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் . ஆனால் தளபதி விஜய் அவர்கள் அந்த காரை வேண்டாம் என மறுத்துள்ளார் இதற்கான காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பல விதமான கருத்துகளை கூறி வரும் நிலையில் தளபதி விஜய் அவர்கள் கூறிய காரணம் சமீபத்தில்
இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் , தளபதி விஜய் அவர்கள் நான் நடிப்பதற்கு நீங்கள் சம்பளம் தருகிறீர்கள் அதுவே எனக்கு போதும் என பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………..