பொதுவாகவே திரையுலகில் பொறுத்தவரையில் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு வதந்திகளும் சர்ச்சைகளும் வருவது என்பது இயல்பான ஒன்று ஆனால் அந்த காலத்தில் வந்ததை தாண்டி தற்போது தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் அதிகளவில் சர்ச்சைகள் கிளம்பி வருவதோடு பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி வேற லெவலில் கிசுகிசுக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா குறித்த டீபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது . அதில் ராஷ்மிகா முகத்தை மார்பிங் செய்து மிகவும் அசிங்கமாக சித்தரித்து இருந்தனர் இதனைதொடர்ந்து இந்த வீடியோ வெளியானதில் இருந்து பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்
தங்களது இணைய பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த வீடியோ குறித்து சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், அதில் போலி வீடியோ விவகாரம் அச்சத்தை தருகிறது சமூகவளைதலங்களில் அன்பு, நேர்மறையான விஷயம், எச்சரிக்கை பதிவுகள் , புதிய தகவல்கள் தான் பகிர வேண்டும் தவிர இதுபோன்ற
முட்டாள்தனமான வீடியோக்களை அல்ல என மிக கோபத்துடன் கூறியுள்ளார். இதையடுத்து இது குறித்து பல முன்னணி பிரபலங்கள் வீடியோ வெளியிட்ட நிலையில் கீர்த்தி சுரேஷ் மிகவும் கோபத்துடன் பேசியதோடு இது என்ன சாபமா இல்ல வரமா என்பது மிகவும் வருத்ததுடன் பேசியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………….