தற்போது திரையுலகில் தொடர்ந்து மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி ,மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அமோக வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல் அவர்களின் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி வேற லெவல் வெற்றியை பெற்று இருந்தது . இந்த படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில்
நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்த படமாக கமல் அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தனம் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் கமல் 234 படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் , ராஜ் கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க
இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனைதொடர்ந்து இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்த நிலையில் காலையில் இருந்து படம் குறித்த பல அப்டேட்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் துல்கர் சல்மான்
நடிக்கும் நிலையில் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….