திரையுலகில் இன்றைக்கு பல இளம் நடிகர்களும் படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் இவர்களுக்கு முன் மாதிரியாக அந்த காலத்தில் இருந்து நடித்து வரும் பல முன்னணி நடிகர்கள் இன்றைக்கும் பல படங்களில் நடித்து வருவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர் . அந்த வகையில் பழம்பெரும் நடிகர் டி எம் பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா 80-களின்
காலகட்டத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், குணசித்திரம், காமெடி என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழில் கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், கும்கி, சாட்டை போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்
இவருக்கு வயது 70 கடந்த நிலையில் சில மாதங்களாக உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் எதிர்பாரதவிதமாக காலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி காலமானார் . இதையடுத்து
இவரது உடல் அவரது சொந்த வீடான வளசரவாக்கத்தில் கொண்டு சேர்க்கபட்டது இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து இவருக்கு இறுதி அஞ்சலியில் பல முன்னணி திரை பிரபலங்களும் அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையடுத்து இந்த தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் பலரையும் நிலைகுலைய செய்துள்ளது எனலாம்……………………….