பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் துவங்கி மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இப்படி இருக்கையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீடே பெரும் களேபரமாக இருந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளில் கமல் அவர்கள் வந்த
நிலையில் பிரதீப் குறித்து சக பெண் போட்டியாளர்கள் அனைவரும் எங்களுக்கு பயமாக இருக்கிறது என கூறிய நிலையில் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் என மூவர் மட்டும் அவரது எதிர்காலம் குறித்து யோசித்து அவர் பக்கம் பேசினர். இப்படி இருக்கையில் நிக்சனின் காதல் மயக்கத்தில் இருக்கும் ஐஷு, அவ்வளவு பிரச்சனையாக இருந்தால் தினேஷ் நேற்று தூக்கி காட்டியிருக்கலாம் தானே என மிகவும்
அசிங்கமாக பேசியுள்ளார். இதையடுத்து அம்மினிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக வரிந்துக்கட்டி வந்த ஜோவிகா, அவர் ஆம்பளையா இல்லையே என வயதுக்கு கூட துளியும் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசியுள்ளார். இந்நிலையில் இவருக்கு வெளியில் அதிகளவில் சப்போர்ட் இருக்கும் நிலையில் தான் இது போன்று செய்து வருகிறார் இப்படியே செய்தால் வனிதாவுக்கு
நேர்ந்த கதிதான் இவருக்கும் என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனைதொடர்ந்து இணையவாசிகள் பலரும் இவரை ட்ரோல் செய்வதை அடுத்து கமல் அவர்களையும் வச்சு செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை கிளம்பி வருகிறது……………….