பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை படைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யு, த்ரிஷா என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் இந்த படம்
ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் புதுமுகமாக ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஜனனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜனனி லியோ சூட்டிங் போது நடந்த பல சுவாரசியமான
தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், படத்தின் சூட்டிங் சமயத்தில் விஜய் சார் இன்ஸ்டாகிரம் ஓபன் செய்தார் அப்போது அவரிடம், என்ன சார் கொஞ்ச நேரத்துல இவ்ளோ பாலோவர்ஸ் வந்துட்டாங்க என்று கேட்டேன். உடனே விஜய் சார் நீங்க இன்ஸ்டாகிராம்ல இருக்கீங்களா என கேட்டு எனது ஐடியை பார்த்தார். அதில் சிம்பு பாட்டு ஒன்றை பாடி பதிவிட்டு
இருந்தேன் அதைபார்த்த உடனே விஜய் சார் அப்படி சிரிக்க ஆரம்பித்து விட்டார் . அவர் அப்படி சிரித்து நான் பார்த்ததே இல்லை அதுவும் விஜய் சார் என்னுடைய ஐடியை போய் பார்ப்பார் என்று நான் என்றைக்குமே நினைச்சது இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………