தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மற்றும் திரையுலகில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம்
பாகம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் நிமிஷா விஜயன் போன்ற பல முன்னணி திரை பிரபலங்களும் இந்த படத்தில் நடிதுள்ளார்கள் . படத்தின் முதல் பாகத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா . லட்சுமி மேனன்
உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் படம் வேற லெவலில் வெற்றியை பெற்று இருந்தது இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்ட நிலையில் படத்தில் லாரன்ஸ் இதுவரை இல்லாத அளவிற்கு வேற
லெவலில் நடித்திருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்படி இருக்கையில் அண்மையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………….