முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பிரபலங்களும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு திரையுலகில் வலம் வரும் நிலையில் கடந்த சீசன் பிக்பாசில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொண்டவர்கள் அமீர் -பவானி ரெட்டி. இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதே காதலித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு
பிறகு இருவரும் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பிக்பாசில் மட்டுமின்றி நிஜத்திலும் இருவரும் காதலித்து வரும் நிலையில் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்வது நெருக்கமாக இருக்கும்படியாக புகைப்படங்கள் வெளியிடுவது என இருந்து
வரும் நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் பவானி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது காதலன் அமீரின் பிறந்தநாளை
வெகு விமர்சையாக கொண்டாடிய நிலையில் அதில் அவருடன் நெருக்கமாக இருந்தபடியாக அமீரின் கன்னத்தை செல்லமாக கடித்தபடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………….