தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் , தேமுதிக அரசியல் கட்சி தலைவர் என பல துறைகளில் அசத்தி வந்ததோடு மக்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த். இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அரசியல்
மீது கவனம் செலுத்த தொடங்கிய நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேலும் வெளிநாடுகளில் எல்லாம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்
அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு இன்று அதிகாலை கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான சிறிது நேரங்களிலேயே அவர் காலமாகி போனதாக பல தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் உறைய செய்தது.
இதையடுத்து விஜயகாந்தின் உடல் மக்கள் பார்வைக்காக அவரது கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது மேலும் அவரது உடலை நாளை நல்லடக்கம் செய்யவுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க விஜயகாந்தின் அப்பா மற்றும் அம்மா அவருடன் விஜயகாந்த் தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………..