மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கபடும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி ஹிந்தி , தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி வரும் நிலையிலும் தமிழில் வெளியாகி வேற லெவலில் பிரபலமாகி வரும் பட்சத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை
காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் துவங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியளர்கள் மத்தியில் சர்ச்சைகளும் வாக்குவாதங்களும் சூடுபிடிக்க துவங்கியதை அடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கம் போல இந்த சீசனிலும் குறிப்பிட்ட தொகையுடன் பணப்பெட்டி வைக்கப்பட்டது இதை எந்த
போட்டியாளர் எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என பலரும் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்த நிலையில் இந்த முறை யூடுப் மூலமாக பிரபலமாகி இன்றைக்கு பலமுன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூர்ணிமா சுமார் 16 லட்சம் மதிப்புள்ள பணபெட்டியை எடுத்துகொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார் . இதற்கிடையில் இவர் இந்த நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்கு வாரத்திற்கு ஒரு லட்சம் பேசபட்ட நிலையில் 13 வாரம் இருந்த நிலையில் பதிமூன்று லட்சம் மற்றும் பணப்பெட்டி பதினாறு லட்சம் சேர்த்து மொத்தமாக 29 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் வாசிகள் மத்தியில் செம பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது………………….