கடந்த சில தினங்களாக திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பரபரப்பாக பேசபட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்ததாக இருக்கும் . இந்நிலையில் தேமுதிக அரசியல் பிரமுகரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாக உடல் நிலை குறைவால் இருந்து வந்த நிலையில் இதற்காக சிகிச்சை பெற்று வந்தார் மேலும் இவருக்கு வெளிநாடுகளில் எல்லாம் சிகிச்சை
கொடுக்கபட்டது . இப்படி ஒரு நிலையில் தற்போது வானிலை மற்றும் புயல் காரணமாக காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொந்தரவுகள் அனைவரையும் பாதித்து வரும் நிலையில் இதன் விளைவாக விஜயகாந்த் சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . அந்த வகையில் அவர் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில தினங்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு
வருவதாகவும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வருவதாகவும் இது போன்ற பல வதந்திகள் வெளியாகி வந்தது. இதற்கு பதில் கொடுக்கும் விதமாக அவரது மனைவியான பிரேமலதா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் கேப்டன் அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் கூறியிருந்தார் . இந்நிலையில் அவர்
மருத்துவமனையில் இருந்தபடியான புகைபடம் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் கேப்டன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கும் நிலையில் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வர பிரர்த்தனை செய்து வருகின்றனர்………………….