சமீபத்தில் இணையத்தில் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகளுள் ஒன்று மன்சூர் அலிகான் சில தினங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷா குறித்து தரகுறைவாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசிய நிலையில்
இந்த விவகாரம் பெரிதளவில் பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் இதன் விளைவாக மன்சூர் அலிகான் போலீசில் புகார் ஆனதை எடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இதன காரணமாக தனது தவறை திருத்தி கொள்ளும் விதமாக த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். இந்நிலையில் போலீசார் த்ரிஷா மற்றும் மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்பிய
நிலையில் இதற்கு பதில் கொடுக்கும் விதமாக த்ரிஷா போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் மன்சூர் அலிகான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் அவர் தான் மன்னிப்பு கேட்டு விட்டாரே என கூறிய நிலையில் இந்த கடிதம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது
ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இது குறித்து பல விமர்சனங்களையும் கருத்துகளையும் கூறி வருகின்றனர். இருந்தும் மன்சூர் அலிகான் தன்னுடைய சக நடிகையான த்ரிஷா குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை என கூறி வரும் நிலையில் இந்த சர்ச்சை மற்றும் தகவல்கள் பெரிதளவில் பரபரப்பாகி வருகிறது………………..