தற்போது சினிமாவில் படங்களில் நடிப்பவர்களுக்கு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பல முன்னணி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகர் பப்லு எனும் ப்ரித்விராஜ். இதையடுத்து இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி பல முன்னணி
நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் ஒருவர் உள்ள நிலையில் கடந்தா சில மாதங்களுக்கு முன்னர் தன்னை விட முப்பது வயது குறைவான இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களது திருமணம் இணையவாசிகள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வந்த போதிலும் இருவரும் அடிக்கடி நெருக்கமாக
இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்ட நிலையில் சமீபத்தில் பப்லு தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் இருக்கும் பட்சத்தில் இது குறித்து விசாரிக்கையில் ஷீத்தல் தனது இணைய பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைபடத்தை அதிகளவில் பகிர்ந்து வந்த நிலையில் அண்மையில் அதில் சில
புகைபடங்களை நீக்கி வரும் நிலையில் இதையடுத்து ஷீத்தல் சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்களா என கேட்ட கேள்விக்கு லைக் செய்துள்ளார். இந்நிலையில் ஒரு வேளை இருவரும் பிரிந்து இருப்பார்களோ என்பது போலன பல கருத்துகள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………