Sunday, April 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்" அவரே ஒரு குடிக்காரா அங்கிள் அவரு என்ன சொல்றாரு " கமல் குறித்து...

” அவரே ஒரு குடிக்காரா அங்கிள் அவரு என்ன சொல்றாரு ” கமல் குறித்து சர்ச்சையாக பேசிய பூர்ணிமா …….. வெளியான வீடியோ …….

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இந்த சீசன் வேற லெவலில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முற்றி வருவதை அடுத்து இந்த சீசன் பிக்பாஸ் ரசிகர்கள்  மத்தியில்

தொடர்ந்து பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் மற்ற சீசன்களை விட இந்த சீசனில் போட்டியாளர்கள் அதிகளவில் விதிமீறல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிலும் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் விதிமீறல்களை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு இணையாக அந்த பக்கம் விசித்ரா, அர்ச்சனா தொடர்ந்து விதிமீறல்களை செய்து வருகின்றனர். இதனை பலமுறை கமல் அவர்கள் விமர்சித்த

நிலையிலும் அவர்கள் இதை சற்று பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதையே செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் வீட்டில் தரக்குறைவான வார்த்தைகளை பேசி வரும் நிலையில் இந்த சீசனில் இது எல்லைமீறி விட்டது எனலாம். இதுவரை சக போட்டியாளர்களை தரக்குறைவாக பேசிவந்த நிலையில் அடுத்த கட்டமாக உலகநாயகன் கமல் அவர்களையே வச்சு செய்துள்ளனர். இப்படி ஒரு நிலையில்

நேற்றைய எபிசோடில் விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் பேசிகொண்டிருந்த போது, அதில் கமல் அவர்கள் தன்னை வளைத்து வளைத்து சென்ற வாரம் கேள்வி கேட்டதை மிகுந்த ஆதங்கத்துடன் பேசியதோடு அவர் ஒரு குடிக்காரா அங்கிள் என பேசியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………..

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments