சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பலரும் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலமாக ஹீரோயினாக
திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அஞ்சலி. இந்நிலையில் சில வருடங்களிலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி திரையுலகிலும் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்
நடிகை அஞ்சலி பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் வெளியாகிய நிலையில் சமீபகாலமாக அவருடன் பழக்கத்தில் இருந்து விலகி தனித்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் பிரபல முன்னணி தொழிலதிபர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில்
இதற்கு விளக்கம் கொடுத்த அஞ்சலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியபோது, முதலில் ஜெய்யை காதலிப்பதாக சொன்னார்கள் அடுத்து தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டதாக கூறினார்கள் . ஆனால் எனக்கு தெரியாமல் திருமணம் ஆனதை நினைத்து எனக்கு சிரிப்பு தான் வருகிறது . நடிகை எனும் ஒரு காரணத்தால் அவரவர் வாய்க்கு வந்தபடி எழுதுகிறார்கள் என மிகுந்த மன வேதனையுடன் கூறியுள்ளார்…………………..